Monday, November 16, 2009

The Taking of Pelham 123 (2009)

சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவும் கதை சொலலும் கண் , வாய்க்காகவும் ஓடும் படங்கள்தான் நிறைய .. அதிலும் get shorty , Be cool போன்ற படங்கள் அருமை. படத்தை பார்த்து முடியும் போது மனதில் நிற்பது ”You are my god damn hero ” எனும் அவரது வசனங்களே.. வோல் ஸ்ட்ரீட் தொடர்பான கட்டாயம் பாரக்கவேண்டிய படம்.

கிறைம் திரில்லர் படங்களின் வகுப்பில் 90/100

Om Shanthi Om (2007)

ஏதோ புளுகு புளு கென்று புளுகுகிறார்குளே அப்படி என்னதான் படத்தில் இருக்கிறது என்று பாரத்துவிடலாம் என்று பார்க்க வெளிக்கிட்ட படம்.. எனக்கென்றால் பெரிதாக எதுவும் தெரியவில்லை.. சாரூக்கான் என்ற மாயையினால் படம் ஜெயித்திருக்கலாம். நடுவில் தமிழ் சினிமாவை காமெடி பண்ணினார்கள் குவிக்கன் முருகன் என்று ஒரு படமெடுப்பதாக கூறி..

பேய்க்கதை வகுப்பில் 25/100

Saturday, November 7, 2009

Tinker Bell (2009)

நட்பின் மேன்மை குறித்தான மிகச்சிறுவர்களுக்கான 3D அனிமேட்டட் படம்.. எனக்கு பார்த்ததில் மண்டைக்குள்ளால் போய்விட்டது.. மிகமிக சிறுவர்களுக்கான படம். நானும் ஏதோ தேவதை குட்டைப்பாவாடையுடன் வருவதால் கலகலப்பாக இரக்கும் எண்டு பாக்க வெளிக்கிட்டது.. கொடுமை பண்ணிட்டாங்கள்

சிறுவர்களுக்கான அனிமேட்டட் பட வகுப்பில் 45/100

Love Aaj Kal (2009)

இதை வீட்டில்தான் பார்த்தேன்..எனக்குப்பிடித்துப்போய்விட்டது..

இுளைஞன் : ” 2 வருசமா காதலிச்சு உங்களுக்குள்ள அப்பிடி மேட்டர் எதுவுமே நடக்கெல்லயா? ” எரிச்சலடைந்த முதியவர்: ”நாங்களெல்லாம் முதலில கனகாலம் கண்ணால காதலிச்சு பிறகு கஷ்டப்பட்டு கலியாணம் கட்டி அதுக்கெல்லாத்துக்கும் பிறகுதான் அதெல்லாம்...
உங்கள மாதிரி கண்டவுடன அதை முடிச்சிட்டு பிறகு .. ஓகே சிஸ்டர் உங்க பெயர் என்ன? என்று கே ட்ட ஆக்களில்ல”

காய்ஞ்ச மாடுகளாயிருக்கும் நம்ம இலங்கை இளைஞர்கள் இந்தப்படத்தை பார்த்தால் உடனே லண்டனுக்கோ ‌ அமெரிக்காவுக்கோ போக முயற்சிப்பது உறுதி ... சுப்பர் பிகரெல்லாம் சும்மா அலைவதாக காட்டி அப்பிடி கடுப்பேத்துவார்கள்.. நானே தலையை இரண்டு தரம் தலையை கொண்டுபொய் சுவற்றில் முட்டினேன். என்ன கொடுமையப்பா?

நல்ல கதை.. அழகான பாத்திர வடிவமைப்புகள்.. அழகான நடிகர்கள் , இனிமையான பின்னணி இசை என நன்றாகவே போகிறது படம்.

வெளிநாடுகளில் இந்தியர் வாழ்க்கை தொடர்பான படங்களில் 65/100

Aladin (2009)

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையை வழமையான ஹிந்தி மசாலாப்பாணியில் சொல்லியிலுக்கிறார்கள்.. யாரோ இலங்கை அழகி நடிக்கிறார் என்று மஜெஸ்டிக் சினிமாவில் பாக்கப்போனால் நம்ம தேசபக்தியுள்ள சனம் என்னை முன்வரிசையில குந்த வைத்துவிட்டது.. என்ன கொடமைடா எண்டு உக்காந்தால் பூச்சாண்டி காட்டுறேன் பெர்வழி என்று மணித்தியாலக்கணக்காக படத்தை போட்டு நொய் நொய் என்று இழுத்து வெறுப்பேற்றி விட்டார்கள்..


எல்லாரும் படத்தை பார்ப்பதை விடுத்து தின்பதிலே யே குறழக்கோளாயிருந்தது மண் டபம் முழுக்க எதிரொலித்த நறுக்கு முறுக்கு சப்தங்களிலும் எரிச்சலூட்டும் பொலித்தீன் பைகளின் சரசரபபிலும் புலப்பட்டது .. திடீரென்று திரையின் அடிப்பாகத்தில் ,” நீங்கள் அதிஷ்டமுள்ளவாராயின் உங்கள் சீட்டுக்கடியில் பரிொசன்று இரக்கும் கண்டுபிடியுங்கள் ” என்று ஒரு அட் ஓடியது.. எல்லாரும் கையில் வைத்திருந்ததை கீழே பொட்டுவிட்டு எழும்பி நின்று சீட்டை தோண்டினார்கள்.. பின்னாலிருந்த பெண்ணொருத்தி என் சீட்டையும் தோண்ட எனக்கு கடுப்பாகி நானும் சீட்டு தோண்டும் விளையாட்டில் கலந்துகொண்டேன்.. அப்படியே ஒரு ‌ஜோக்கைப்போட்டு அந்த ஓ எல் படிக்கும் சிங்களப் பெண்களின் குழுவுடன் செட்டாகிக்கொண்டேன்.. இடைவேளை நேரம் ஓசியில் ஒரு ஐஸ்கிரீம் கிடைத்தது ..

படம் சொதப்பல்.. கிராபிக்ஸ் பரவால்ல.. மற்றும் படி வீண்காசு.. அந்த பெண்கள் என்னை பேஸ்புக்கில் அட் பண்ண ஈமெயில் ஐடி வாங்கிக்கொண்டு போனார்கள்.. இன்னும் ஒன்றையும் காணம்.. சே..

Mary and Max (2009)
மிக அருமையான , வயது வந்தவர்களுக்கான கிளேமேஷன் படம்.. இரு பேனா நண்பர்களுக்கிடையிலான 20 வருட வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு ‌ மனநோயளியும் ஒரு பெண்ணும் சந்திக்காமல் அனுபவிக்கும் உணர் வோட்டங்களை மிக தெளிவாகவும் அழகாகவும் வடிவமைப்பில் அசிங்கமான பாத்திரங்களளுடே விளக்குகிறார் இயக்குனர்.. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..

படம் பார்த்து முடிந்ததும் என் மனம் ஏதோ இனம்புரியா உணர்வுகளால் நிரம்பியிருந்தது.. ஹட்ஸ் ஓப்ஃ டு டிரெக்டர்..கிளேமேசன் திரைப்பட வகுப்பில் 90/100


Mary & Max படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்

Wednesday, November 4, 2009

கண்டேன் காதலை ( 2009 )


யாழிலிருந்து விடுமுறையில் கொழும்பு வந்திருந்த தம்பிக்கு நான் ஈரோசில காட்டிய படம்.. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் போனதால் படம் பிரமிக்க வைத்து விட்டது..

அழகான காதல் கதையுடன் சந்தானத்தின் கொமெடியும் சேர்ந்து படத்தை பல்லக்கில் ஏற்றிவிட்டன.

ரொக்சியை விட பலமடங்கு வசதி மிக்க மலிவான தியேட்டர் ஈரோஸ். டிரிஎஸ் சவுண்ட் சிஸ்டம் எண்டால் என்னவெண்டு அங்கே போய்த்தெரிந்து கொள்ள வேண்டும். ஏசியும் பூட்டியுள்ளார்கள் பல்கனிக்கு.

கட்டாயம் போய்க் குடும்பத்துடன் பாருங்கள்.. ஏதோ ஹிந்திப்படத்தின் றிமேக்தானென்றாலும் அழகாக உள்ளது..

மென்மையான குடும்பப்படங்கள் வரிசையில் 80/100

Monday, October 26, 2009

The Tournament (2009)


Death Race என்று 2008 இல் வெளி வந்த ஒரு அருமையான அக்சன் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.. பழைய கிளாடியேட்டர்களை ஒத்த விளையாட்டு அமைப்பொன்றை சிறையினுள்ளே ஏற்படுத்தி அதன் மூலம் பிரபலம் பணம் அடைய முயற்சித்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதே கதை ... அதைத்தொடர்ந்து அதே பாணியில் இன்னொரு படம்..இம்முறை சிறையில்லை.. ஒரு நகரமே அல்லோல கல்லோலப்படுகிறது இந்த டூர்ணமெண்டுக்காக.. ஒரு 30 பெயர் பேோோன கொலையாளிகளை போட்டியில் ஈடுபடுத்தி கடைசியில் வெல்பவருக்கு பரிசளிப்துதான் அந்த போட்டி.. முடிவில் ஒருவர் மட்டுமே உயிர் தப்ப வேண்டும்.. அதுதான் விதி.. 24 மணிநேர அவகாசம்.. பிறகென்ன ரத்தக்குளியல்தான்.. அதில தவறுதலா ஒரு செர்ச் பாதரும் போட்டியில தெரியாம உள்வாஙக்பட்டுடுறார்.. அவரைச்சுட மற்றவங்கள் துரத்த அந்தாள் குய்யொ முறையோ எண்டு குழறிக்கொண்டு ஓடுறதும் இடைக்கிட ஒப்பாரி வைக்கிறதுமா போகுது கதை.. இறக்கி பாருங்க...

அக்சன் பட வகுப்பில் 75/100

Death Race படத்தை டெபொசிட் பைலில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்
Tournament படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்


Sunday, October 25, 2009

Orphan (2009)


அனாதை ஆச்சிரமத்திலிருந்து ஒரு ஒன்பது வயதுப்பிள்ளையை எடுத்து வருகிறார்கள் ஒரு நடுத்தரவயதுத் தம்பதியினர்.. அதைத்தொடர்நது வீட்டினுள் ஒரே அசம்பாவிதங்கள் .. தாயார் அந்தப்பிள்ளை மீது சந்தெகம் கொள்கிறார்.. ஆனால் தந்தையார் அதை நம்ப மறுக்கிறார்.. காரணம் அவளது முன்னாள் குடிப்பழக்கம்.. தொடர்ந்து அந்தப்பிள்ளையின் மிகவும் மச்சூர்த்தனம் தாயாரை ஆச்சரியப்பட வைக்கிறது.. கடைசியில் குடும் பமே அல்லோல கல்லோல பட்டு தந்தையை இழந்த மகனை ஐசியுவில் ஏறத்தாழ பலிகொடக்கப்பாத்து தாய் கத்திக்குத்து வாங்கி ரணகளமாக முடிகிறது..

இந்த படத்தில் கடைசியில்தான் ஒரு டேனிங் பொயிண்டு.. அதை நடைபெறும் அசம்பாவிதங்க ளுக்கு காரணமாக கூறுகிறார்கள்.. எனக்கு ஏதோ அது பெரிதாக நடைபெறும் பொல தெரியவில்லை.. அதுகுறித்து நெட்டில் தேடிப்பார்த்தேன்.. நீங்களும் பாருங்கள..

கவனம் ஒரு கசமுச சீன் வருகிறது .. அதையும் அந்த பிள்ளை பார்த்துவிடுவது போலவும் பார்த்ததை தம்பதி பார்த்துவிடுவது போலவும் வடிவமைத்துள்ளார்கள்..


ஏதோ யாராவது தமிழ் டிரெக்கடர் இந்தப்படம் பாரத்தானெண்டால் கட்டாயம் இன்னு மொரு வருசத்தில ”அனாதை ... அஞ்சவைக்க வருகிறாள் ” எண்ட போஸ்டர் பார்க்கலாம்..

ஹொரர் படங்கள் வரிசையில் 40/100


படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்.

Wednesday, October 21, 2009

Dog House (2009)ஹொரர் காமெடிப்படங்கள் வருவது இப்போது ப ஷன் ஆகிவிட்டது போலும்.. அடுத்தடுத்து வருகிறன ?

எனக்கு பேய்ப்படம் பார்க்க பயங்கரவிருப்பம்.. ஆனால் கூட பத்துப்பேர் இருக்க வேணும்.. அத்தோட ஒரு ஓட்டைபோட்ட பெட்சீட்டு வெணும்.. பெட்சீட்டுக்குள்ள இரந்து கொண்டு அந்த ஓட்டைக்குள்ளால நான் பாக்கிறத பாத்து அந்த பத்து ‌ பேரும் சிரிக்காம இருக்க வேணும்.. உந்த விதியை மீற நினைச்சதால ட்ராக் மீ டு ஹெல் பாத்திட்டு பத்து நாளா பகலிலயே பாத்ரூம் போக பயந்ததெல்லாம் நடந்தது.. ஆகவே மறுப்டியும் பேய்ப்படம் பார்ப்பதெப்படி எண்டு யொசித்துக்கொண்டிருந்த வேளைதான் இந்த காமெடி ப்ளஸ் ஹொரர் படங்கள் வர ஆரம்பித்தன.. இடக்கிடை சடீர் புடீர் எண்டு சத்தம் போட்டு பீதிய கிளப்பினாலும் கண்ட கண்ட ஆயுதங்களால அரிஞ்சு தள்ளினாலும் ஏதோ காமெடியாத்தான் முடியும் எண்ட நினைப்பில அழுதழுது சிரிச்சிட்டிருக்கலாம்..

படம் பரவாயில்லை.. பெரிதா சிரிப்பு வராவிட்டாலும் ஒரு ஹொரர் படம் பார்த்த திருப்தி மிச்சம்.. கதை என்னவெண்டால் , விவாகரத்தால மனமுடைந்து போயிருக்கிற ஒரு நண்பனை ஒரு ஆறுபேர் ஒருத்தனின் பாட்டியின் கிராமத்துக்கு அழைத்து ப்போக விரும் புகிறார்கள். அங்க ஒரு விதமான வைரசால பொம்பிளையள் எல்லாம் ஆம்பிளையள சாப்பிடுற கனிபல்களா மாறிவிடுகிறாங்கள்.. எப்பிடி இந்த நண்பர் குழு உள்ள மாட்டுபட்டு தவிக்குது எனபத தைதான் சற்று நகைச்சுவை கலந்த சொல்லியிருக்கிறாங்கள்.. நல்ல கமெரா , இழுபடாத கதை போன்ற வற்றால படம் சுவாரசியமா போகுது.

எங்காவது கிடைச்சா பாருங்க..

ஹொரர் + காமெடி படங்களின் வகுப்பில் 55/100

படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்.

District 13 Ultimatum (2009)


2004 இல் வெளிவந்த பிரெஞ்சுத்திரைப்படமான ட B13 ஐ நீங்கள் பார்த்திராவிட்டால் உங்களை ஒரு அக்சன் பட விரும்பி என அழைத்துக் கொள்வதில் அர்த்தமேதுமில்லை.. பிரான்சை ஒரிஜினாக கொண்ட Parkour என்ற அற்புத கலையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சாகசப்படம் அது.. எந்த கயிறு தொழிநுட்பமோ கிராபிக்சோ பயன்படுத்தாமல் மயிர் கூச்செறியும் பாதைகளினூடே தப்பி ஓடியவாறு தாக்கும் நுட்பம் அது. Ong Bak எனும் தாய் ( Thai) திரைப்படத்துக்கு இணையாக ஒப்பிடப்பட்டது..

அந்த படத்தின் இரண்டாம் பகுதிதான் B13-U , அதாவது ஆங்கிலாக்கத்தில் District 13 Ultimatum.. முதல் பட முடிவில் காட்டப்படும் ஒரு சம்பவம் காரணமாக குறித்த புறநகர்ப்பிரதேசத்தில் ஒரு கொந்தளிப்பு ஏற்படுகிறது.. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட DISS எனும் குழு ஒரு செயல்திட்டததை அரங்கேற்றுகிறது.. அதை முறியடிக்க கதாநாயகர்கள் முயற்சிக்கிறார்கள்.. முடிவு என்ன என்பதை விறுவிறுப்புடன் பார்த்து ரசியுங்கள்.

அக்சன் திரைப்படங்கள் வரிசையில் 80/100


படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க
இங்கே அழுத்துங்கள்.

Sunday, October 18, 2009

Zombie Land (2009)
ஒரு வித வைரஸ் நோயால் மனிதர்களெல்லாம் நரமாமிச உண்ணிகளாக மாறிவிடுகிறார்கள். ( பொறுங்க கொட்டாவி விடாதீங்க) இப்பிடி பல படங்கள் வந்திருந்தாலும் , இந்தப்படம் ஒரு காமெடிப்படம்.. அருவருக்க வைக்காமல் சுவாரசியமாக கதையை இழுத்துச்சென்றிருக்கிறார்கள் அதுவும் வெறும் நான்னே நான்கு கரெக்டர்களை வைத்து.. எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது..

அழகான இரண்டு குட்டிகள்.. காமெடி ஹீரொ.. விறைப்பான ஹீரொ என்று கதாபாத்திரஹ்கள் அமைந்திருந்தாலும் கதை அருமையாக பொருந்திப் போகிறது..

கட்டாயம் பாருங்கள்..

வைர ஸ் தாக்குதலினால் உலக அழிவுக்கு பின்னான காமெடி படவகுப்பில் 80 /100

Friday, October 16, 2009

ஆதவன் (2009)


தீபாவளி தினம் பிறக்கும்போது தியேட்டருக்குள்தான் கோலா குடித்துக்கொண்டிருந்தேன்.. லிபேட்டியில் ஆதவன் போட்டார்கள்.. பாடசாலை நண்பர்களுடன் சென்றதால் கும்மாளத்துக்கும் கூத்துக்கும் குறைவில்லை.. படம் முதல்பாதி குய்யோ முறையோ என்று சிரிக்க வைத்விட்டார்கள்.. வடிவேலு வடிவேலுதான்... இரண்டாம்பாதி மெதுமெதுவாக சொதப்ப ஆரம்பித்து கடைசியில் உச்ச கட்ட சொதப்பல்.. ஏதோ முற்பாதியில் இருந்த திருப்பதியால் ரவிக்குமாரை திட்டாமல் வந்தோம்.. நயன்தாரா கிழண்டிவிட்டது.. பிரபுதேவாவை செட் பண்ணிக்கொண்டு வீட்ட போக வேண்டியதுதான்.. நாகேசின் மகன் சும்மா வந்து போகுது பாவம்... சூர்யா சும்மா ஏதோ செய்கிறார்.. ரவியும் உதயநிதியும் வரும் இடம் இழுவை... உதயநிதிதான் அந்த பறக்கிற சீன் வைத்திருப்பார் என்று நினைக்கிறன்.. குருவியை எல்லாரும் சுட்டு விழுத்தியும் பயபுள்ள இன்னும் திருந்தலை பாரேன்? கடைசியில அந்த ரொக்கெட் லோஞ்சரை கையால எடுத்து குத்துறத கண்டால் அமெரிக்காக்காரன் பட்டையும் கொட்டையும் பொட்டுக்கொண்டு இன்னொரு நோபல் பரிசுக்கு அப்ளை பண்ணுவான்.

மற்றும் படி படம் சும்மா பாக்கலாம்.. காமெடிப்பீசு..

தமிழ் மசாலாப்படங்கள் வரிசையில் 45/ 100

Thursday, October 15, 2009

The New World (2005)


ஆங்கிலேயர்கள் அமெரிக்காவின் வேர்ஜீனியப்பகுதிகளில் குடியேறியது குறித்து நீங்கள்
வாசித்து அறிந்திருப்பீர்கள்.. சிறுவயதில் இருக்கும்போது pocahontas என்ற அழகிய பெண் பாத்திரத்தின் காரட்டூன்களும் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள்.. 1607 ம் ஆண்டு காலப்பகுதியல் இடம்பெற்ற அந்த குடியேற்ற சம்பவம் பற்றிய உண்மைக்கதையே திரைப்படமாக அழகாக தொகுத்து தரப்பட்டுள்ளது.. உண்மைக்கதையாகயால் விறுவிறுப்பு சற்று குறைவு. ஆனாலும் அழகாக உள்ளது.
அந்தக்காலத்தில்செவ் இந்திய மக்களின் கருணையால் பிழைத்து பிறகு அவர்கள் கொடுத்த
விதைகளை கொண்டு விவசாயம் செய்து பிறகு அவர்களை யே அழித்தவர்கள் இப்போதும் ஏனையவர்களை அழித்துக்கொண்டுள்ளார்கள் என்பதை பார்க்க சிரிப்பாக உள்ளது.. வரலாற்று ரசிகர்களுக்கு சரியான தீனி..


வரலாற்று படங்களின் வரிசையில் 75 /100


Friday, October 9, 2009

Labor Pains (2009)


தங்கையை காப்பதற்காக கர்ப்பம் என்று பொய் சொல்லும் ஒரு செக்ரட்டரி என்னென்ன சோதனை சாதனைகளூடே சென்று என்னவானாள் என்பதே கதை.. படம் பம்பலாக இரக்குமெண்டதான் நினை ச்சேன்.. ஆனால சொல்லிக்கொள்ளுற அளவுத்துக்கு இல்ல..

வழமையா வெள்ளைக்காரியள் பேல் ஆக தெரிவதை தடுப்பதற்கு நிறைய மேக்கப்பள்ளி போட்டுக்கொள்ளுவார்கள்.. அப்படி இல்லாம அதுகளை நேர பாத்தால் நம்ம ஊரு நாய் கூட ஆய் போயிடும்.. ( நம்ம சென்னை பாசை ஹிஹி) .. இந்த படத்தில அதுதான் பிரச்சனை.. அந்த பெண் பெரிய வடிவில்லை.. அதோட மேக்கப்பும் சரியில்ல.. போதாததுக்கு குமட்டுற மாதிரி கதைக்குது.. குளொசப்பில அத காட்டும் போதெல்லாம் நான் நம்ம அண்ணா விஜயகாந் ஓட பம்லி போட்டோவ பாத்து சமாளிச்சிக்கொண்டேன்..

வடிவேலு வந்து ட டிக்கியை ஆட்டுவதற்கு சிரிக்கும் எனக்கு இதெல்லாம் சரி வரவில்லை. சும்மா ஓடவிட்டு ஓடவிட்டு பாத்தேன்..

காமெடிப்படங்கள் வரிசையில் 25/ 100

Star Trek (2009)


பரவாயில்லாத விண்வெளிப்படம்.. நல்லா அட்வான்சாகி பல்வேறு உலகத்தில இரக்கிறவங்கள் எல்லாம் ஒரு கூட்டமைப்பு மாதிரி உருவாக்கி வாழுற நேரம் சில அழிவுகள் ஆரம்பிக்குது.. என்னடா விசயம் எண்டு பாத்தா யாரோ ஒரு சொத்தி மூக்கு உலகத்தினர் , தங்கட உலகம் அழிஞ்சிட்டு இருந்தபோது அதை காப்பாத்தேல்ல.. உங்களுக்கும் அதே வலி தெரியவேணும் .. இருங்கடா வாறம் எண்டுட்டு வழிதெருவில இருக்கிற கிரகங்களை அழிக்கிறார்கள்..

எதிர்காலம் நிகழ்காலம் அது இது எண்டு குழப்பினாலும் அதை லொஜிக் பிசகாமல் எடுத்து சென்றிருப்பது அருமை.. நடுவில ஹீரோவ ஒரு பனிப்பிரதேசத்தில தள்ளி விட்டுடுவாங்கள்... அங்க கரடி , நண்டு போல பயங்கரமான பிராணி எல்லாம் வந்த வயித்தை கலக்குது.. மற்றும் படி நாம நல் லூர் திருவிழாவில வாங்கின மாதிரி ரெண்டு மூண்டு துவக்கை வச்சு படத்தை முடிச்சிட்டாங்கள்..

பொழுது போக்காட்ட பாக்கலாம்..

விண்வெளிச்சண்டை படங்கள் வகுப்பில் 55/100 .

Thursday, September 24, 2009

Observe and Report (2009)Pal Blart Mall Cop என்ற அருமையான நகைச்சுவைத்திரைப்படத்தை பார்த்து அனைவரும் சிரித்து மகிழ்ந்திருப்பீர்கள்.. ஒரு சுப்பர் மாக்கட் போன்ற இடத்தில் ( வெளிநாடுகளில் மால் என்று அழைப்பர்) வேலை செய்யும் செக்யுரிட்டி காட் பற்றிய திரைப்படம் அது.. மிக திறமையா நடித்திருந்த அந்த குண்டு மனிதர் அனைவரையும் சிரி க்க வைத்திருந்தார்..

அதே கொன்செப்டில் வந்திருக்கும் இன்னொரு திரைப்படம் Observe and Report ..
Mall Cop அளவுக்கு சிரிப்பு இல்லாவிட்டாலும் சும்மா பார்க்கலாம்... ஆனால் குடும்பத்தோடு இருந்து பார்த்து விடாதீர்கள்.. படம் முழுவதும் ஒரு குண்டன் அம்மணக்கட்டையாக ஓடித்திரிகிறான்.. அவனைப்பிடிக்கதான் ஹீரோ பகீரதப்பிரயத்தனம் செய்கிறான்..


சில சென்டிமெண்ட் டச்சுகள், சில அக்சன் சீனகள், சில மஜா சீன்கள், சில கருத்து சீன்கள் என்று படம் குறுகுறுப்பாகவே போகிறது.. ஆனால் படம் வழமையான ஆங்கில காமெடிப்படங்களின் ரெசிப்பியை பொலோ செய்ததுதான் சலிப்பைத்தருகிறது..

13 வயதுக்கு மெற்பட்டவர்கள் காமெடிப்படங்களின் வகுப்பில் 40/100

Wednesday, September 23, 2009

நினைத்தாலே இனிக்கும் (2009)
நல்லகாலம்.. ஈரோசுக்கு போயிருப்பேன் இந்த இழவைப்பார்க்க.. கிடைத்த நல்ல கமெராக்கொப்பியால் ஒரு தலையிடி மிச்சம்..


ஏதோ சும்மா கல்லூரி காலம் , அது , இது , 8 வருசத்துக்கு பிறகு மர்ம முடிச்சு அவிழுது.. நழுவுது எண்டு எத்தனையோ படங்களில் பார்த்த அதே அலப்பறை..


பாட்டுக்களையும் சொதப்பல் சீன்களையும் ஓடவிட்டுப்பார்த்தே மனுசனுக்கு வெறுத்துவிட்டது.. அதிலும் அடிபட்ட ப்ரியாமணிக்கு மச்சான் மருந்து தயாரித்து ( அதுவும் ஸ்கூல் கெமிஸ்ரி லாப்பில்) கட்டி அழுகிற சீனைப்பார்த்தபோது காதால் வந்தது புகையாக இருக்கலாம்.


சிரிப்பே வராத கொமெடிகள்.. கவலையே வராத சென்டிமெண்ட் காட்சிகள் என்று அருமையான படம்.. உன்னைப்போல் ஒருவனில் வரும் சுருட்டு குடிக்கும் பெண் இங்கு
ஏதோ வந்து போகிறார்.. கடைசியாக கைகாட்டும்போது மக்கள் அழுவார்கள் என்று நினைத்து இயக்கிய டிரெக்டரை நினைக்க சிரிப்புதான் வருகிறது..

நினைத்தாலே இனிக்கும் : இனிப்பு போட மறந்துட்டாங்க..


கல்லூரி காலம் தமிழ்ப்பட வகுப்பில் 15/100

Tuesday, September 22, 2009

The Curse of the Were Rabbit (2005)
அனேகமாக , வந்த எல்லா அனிமேசன் திரைப்படங்களையும்
5 தட வையாவது பார்த்து விடுவதண்டு.. அப்படியிருக்கும் போது மிஸ் பண்ணியிருந்த படமான இது நேற்று கிடைத்தது..


Wallace & Gromit என்ற இரு பாத்திரங்களின் சாகசங்கள் அடங்கிய சிறுவருக்கான கதையே
இது.. அனைவரும் என்ற பெமசான Chiken Run படத்தை பார்த்து ரசித்திருப்பீர்கள்.. அதில் வரும் கரெக்டர் வடிவமைப்பு சற்று பொம்மைத்தனமானது.. அதே போலத்தான் இங்கும்.. சற்று பொம்மைத்தனமான உருளைக்கரெக்டர்கள்.. இந்த கரெக்கடர்களை வைத்து பல குறும் அனிமேட்டட் திரைப்படங்கள் வந்துள்ளன.


சிறுவர்கள் கட்டாயம் பாரக்கவேண்டும்.. பெரியவர்களுக்கு சிலவேளை அலுப்படிக்கும்.. சும்மா விஞ்ஞானம்.. விவசாயம் ன்று பரபரப்பாகவே ுபோகிறது படம்.. நானும் ரசித்தேன்..


சிறுவருக்கான அனிமேட்டட படங்கள் வகுப்பில்
80/100

9 (2009)உலக அழிவின் பின்னரான ஒரு காலப்பகுதியில் ஒரு சாக்கு போல உருவமுடைய ஜந்து விழி த்தெழுகிறது.. பின்னர் தன்னுடைய உருவத்தை ஒத்த சிலரை கண்டு பிடிக்கிறது.. அவை யார் ? ஏன் உலகம் அழிந்தது? அவர்களை அழிக்க வரும் அந்த இயந்திரங்க ள் என்ன? இப்படியான கேள்விகளுக்கு விடை மிக அழ காக ஆனால் அழுக்கான பின்னணியில் தரப்பட்டுள்ளது..


கிளைமாகஸ் சிலருக்கு புரியாமல் போகலாம்.. அது ஒரு குழப்பகரமானதாகுவே இருக்கிறது.. உயிர் (Soul) சேமிப்பு தொடர்பான சில கருத்துக்களும் அதனுள்தான் மானுடம் இருக்கிறது என்ற கருத்துகளும் உடன்பட முடியாதவை.. கடைசியா ‌ பெய்யும் மழைத்துளியில் வைரசுகள் மானுட soul உடன் வருவது போன்ற காட்சி சப்பென்று இருக்கிறது.. பேசாமல் முீண்டும் உலகம் உயிர் தோன்றிய காலத்துக்கு போவது பொல விட்டிருக்கலாம்..


குழந்தைகள் பார்த்தால் அவர்களுக்கு ஒரு இழவும் புரியாது.. அதுவும் 1 2 3 தெரியாத குழந்தைகள் கடுமை யாக குழம்பிவிடும் ..


அனிமேட்டட
் திரைப்படங்கள் வகையறாவில் 70/100

District 9 (2009)பூமிக்கு வரும் ஏலியன்கள் .. அவர்கள் எமது ஐ டி பி காம்புகளை விட ஒழுங்கான காம்புகளில் குடியமர்த்த படுகிறார்கள்..
அப்போது ஒரு ஏலியன் சந்தேகத்துக்கிடமான வேலைகளை செய்கிறது.. அதை தற்செயலாக கண்டுபிடித்த இடத்தில் படத்தின் ஒரு முக்கிய கரெக்கடரக்கு விபரீதம் நிகழ்ச்து விடுகிறது..
அதன் பின் என்னவானது என்பதை திகட்டாத திருப்பங்களுடன் பார்க்க போடவேண்டிய ஒரே படம் District 9
வன்னியில் சண்டை நடக்கும் போது ரூபவாகினியில் காட்டியது போல தோள் கமெராவால் லைவ்வாக எடுத்தது போல படம் போட்ரெய்ட் செய்யப்பட்டது உகந்த
தெரிவு..


ஏலியன் பட வகுப்பில் 85/100

UP (2009)
Wall - E என்ற பிரமாண்ட வெற்றி பெற்ற அனிமேசன் திரைப்படத்தின் பின்னதாக பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்க பிக்சார் அனிமெசன்ஸ் தாபனம்
வெளியிட்ட அனிமெட்டட் திரைப்படம் UP...


UP வசூலில் வெற்றி பெற்றாலும் Wall - E போல குழந்தைகள் நெஞ்சை அள்ளவில்லை.. காரணம் படத்தில் இழையோடியிருக்கும் சோகம்.. இளவயதுக்கனவுகள் பலிக்காமல்
மரணிக்கும் ஒரு பெண் பாத்திரம் படத்தின் கலகலப்பை அழித்து விடுகிறது.. நகைச்சுவை பெரிதாக இல்லை.. ஆனாலும் கதையோட்டத்துக்காக பார்க்கலாம் அழகான
படம் கூட


அனிமேட்டட திரைப்படங்கள் வகுப்பில் 85/100

Monday, September 21, 2009

G.I. Joe: The Rise of Cobra (2009)

கான்சர் கலங்களை அழிக்க கண்டுபிடிக்கப்பட்ட நனோமைட்டுகள் எனப்படும் சிறிய சுயவிருத்தி செய்யக்கூடிய ரோபோட்களை உலகத்தை அழிக்க பயன்படுத்துவது
போன்ற ஒரு கதை.. சாம்பிள் அழிவுகளை காட்டி மக்களை பயப்படுத்த நினைக்கும் கும்பலை ஜோ குழுவினர் எப்படி அழிக்கிறார்கள் என்பதே படம்..
முடிவு இன்னொரு படமும் வரும் போல இருக்கிறது என்பதை உணர்த்துகிறது..

சும்மா பார்க்கலாம்.. கிராபிக்ஸ் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழமுடியாது.. வழமை போல சைனாக்காரன் சண்டை ஒண்டு இருக்கு.. இம்முறை ஒரு ப்ளாஸ்பேக்கையும்
கோட்டு வதைத்துள்ளார்கள்..

பொழுது போக்க வேறு ஏதும் இல்லாவிட்டால் பாருங்கள்..


எதிர்கால தொழிநுட்பம் , விஞ்ஞானம் , யுத்தம் , கிராபிக்ஸ் வகையின் கீழ் 40/100

உன்னைப் போல் ஒருவன்


தமிழ் படவுலகில் அருமையான வரவு.. மோகன்லாலும் கமலும் இரு போலி்ஸ் அதிகாரிகளும் ஒரு தக்காளிப் பழமும் என வேகமாக நகரும் கதை..

புதிய முயற்சி .. தொய்வுறாமல் போகிறது.. பெரிதாக காமெடி இல்லை.. ( வடிவேலு வந்து டிக்கியை ஆட்டவில்லை ) பாட்டு இல்லை.. ஆனால் சுவாரசியத்திற்கு குறைவில்லை..

பரபரவென நகரும் படைப்பு.. பாத்திரங்களின் தெரிவு பங்களிக்கிறது..
குண்டு வைத்து குறிக் கோளை சாதிப்பது தொடர்பான ஆங்கில பாணியிலான கதை..

கட்டாயம் பாரக்க வேண்டிய படம்..

சில லொஜிக் குத்தல்கள் உண்டு.. உதாரணமாக தக்காளிப்பழத்தை தடவிப்பொறுக்கும் ஒரவன் லாப்டொப்பை குப்பைக்குள் பொட்டு கொழுத்துதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. ஆனால் அதுவும் ஒரு பில்டப்பை கூட்டி படத்தை மெருகூட்டுகிறது..

திரில்லர் வகுப்பில் 76/100

Drag Me to HellThe Ring என்ற படத்துக்கு பின் 3 வருடத்துக்கு பிறகு பயந்து நடுங்கி வேர்த்து விறுவிறுத்து அலறி குழறி 3 நாளா முக்கி முக்கி பார்த்த சிறந்த பேய்ப் படம்.. Drag Me to Hell

நான் பல பேய்ப்படங்களை காமெடிக்காக பாரப்பதுண்டு.. அவற்றில இப்படியான சில தற்செயலாக வந்து புளியைக்கரைத்து விடுவதுண்டு...

முடியல.. யாராவது இந்தப்படத்தை தனிய இரவில ஒரு லைட்டும் போடாமல் புல் சவுண்டில விட்டு பாத்தீங்களெண்டால் அடுத்தநாள் உங்களை கட்டாயம் ஆஸ்பத்திரியில வந்து பாப்பன்..அந்த கிழவிதான் உந்த படத்தில நடுங்க வைக்கிறது... யம்மாடி.. ஆத்தாடி... என்னா ஒரு சூனியம்? என்னா ஒரு வன்மம்? என்னா ஒரு பொக்கை வாய்? அதில ஒரு ஓட்டை பலசெட்டு..

கடவுளே இபப்ப நெச்சாலும் வயித்தை கலக்குது..

கட்டாயம் பாருங்க..

நம்மட ஒபிசில ஒருத்தர் வீட்ட மனுசி கூட இருந்து இந்நத படத்தை பாத்திருக்கார்.. ஆளுக்கு இண்டைக்கு
பயங்கர காய்ச்சல்..
வேற ஒண்ணுமில்லீங்க ... படம் நடுவில தற்சயலா திரும்பினப்போ பக்கத்தில மனுசிய குளோசப்பில பாத்திட்டார்..

பய்ங்கர படங்கள் வகுப்பில இந்தப்படத்துக்கு 95/100