Thursday, September 24, 2009

Observe and Report (2009)



Pal Blart Mall Cop என்ற அருமையான நகைச்சுவைத்திரைப்படத்தை பார்த்து அனைவரும் சிரித்து மகிழ்ந்திருப்பீர்கள்.. ஒரு சுப்பர் மாக்கட் போன்ற இடத்தில் ( வெளிநாடுகளில் மால் என்று அழைப்பர்) வேலை செய்யும் செக்யுரிட்டி காட் பற்றிய திரைப்படம் அது.. மிக திறமையா நடித்திருந்த அந்த குண்டு மனிதர் அனைவரையும் சிரி க்க வைத்திருந்தார்..





அதே கொன்செப்டில் வந்திருக்கும் இன்னொரு திரைப்படம் Observe and Report ..
Mall Cop அளவுக்கு சிரிப்பு இல்லாவிட்டாலும் சும்மா பார்க்கலாம்... ஆனால் குடும்பத்தோடு இருந்து பார்த்து விடாதீர்கள்.. படம் முழுவதும் ஒரு குண்டன் அம்மணக்கட்டையாக ஓடித்திரிகிறான்.. அவனைப்பிடிக்கதான் ஹீரோ பகீரதப்பிரயத்தனம் செய்கிறான்..


சில சென்டிமெண்ட் டச்சுகள், சில அக்சன் சீனகள், சில மஜா சீன்கள், சில கருத்து சீன்கள் என்று படம் குறுகுறுப்பாகவே போகிறது.. ஆனால் படம் வழமையான ஆங்கில காமெடிப்படங்களின் ரெசிப்பியை பொலோ செய்ததுதான் சலிப்பைத்தருகிறது..

13 வயதுக்கு மெற்பட்டவர்கள் காமெடிப்படங்களின் வகுப்பில் 40/100

Wednesday, September 23, 2009

நினைத்தாலே இனிக்கும் (2009)




நல்லகாலம்.. ஈரோசுக்கு போயிருப்பேன் இந்த இழவைப்பார்க்க.. கிடைத்த நல்ல கமெராக்கொப்பியால் ஒரு தலையிடி மிச்சம்..


ஏதோ சும்மா கல்லூரி காலம் , அது , இது , 8 வருசத்துக்கு பிறகு மர்ம முடிச்சு அவிழுது.. நழுவுது எண்டு எத்தனையோ படங்களில் பார்த்த அதே அலப்பறை..


பாட்டுக்களையும் சொதப்பல் சீன்களையும் ஓடவிட்டுப்பார்த்தே மனுசனுக்கு வெறுத்துவிட்டது.. அதிலும் அடிபட்ட ப்ரியாமணிக்கு மச்சான் மருந்து தயாரித்து ( அதுவும் ஸ்கூல் கெமிஸ்ரி லாப்பில்) கட்டி அழுகிற சீனைப்பார்த்தபோது காதால் வந்தது புகையாக இருக்கலாம்.


சிரிப்பே வராத கொமெடிகள்.. கவலையே வராத சென்டிமெண்ட் காட்சிகள் என்று அருமையான படம்.. உன்னைப்போல் ஒருவனில் வரும் சுருட்டு குடிக்கும் பெண் இங்கு
ஏதோ வந்து போகிறார்.. கடைசியாக கைகாட்டும்போது மக்கள் அழுவார்கள் என்று நினைத்து இயக்கிய டிரெக்டரை நினைக்க சிரிப்புதான் வருகிறது..

நினைத்தாலே இனிக்கும் : இனிப்பு போட மறந்துட்டாங்க..


கல்லூரி காலம் தமிழ்ப்பட வகுப்பில் 15/100

Tuesday, September 22, 2009

The Curse of the Were Rabbit (2005)




அனேகமாக , வந்த எல்லா அனிமேசன் திரைப்படங்களையும்
5 தட வையாவது பார்த்து விடுவதண்டு.. அப்படியிருக்கும் போது மிஸ் பண்ணியிருந்த படமான இது நேற்று கிடைத்தது..


Wallace & Gromit என்ற இரு பாத்திரங்களின் சாகசங்கள் அடங்கிய சிறுவருக்கான கதையே
இது.. அனைவரும் என்ற பெமசான Chiken Run படத்தை பார்த்து ரசித்திருப்பீர்கள்.. அதில் வரும் கரெக்டர் வடிவமைப்பு சற்று பொம்மைத்தனமானது.. அதே போலத்தான் இங்கும்.. சற்று பொம்மைத்தனமான உருளைக்கரெக்டர்கள்.. இந்த கரெக்கடர்களை வைத்து பல குறும் அனிமேட்டட் திரைப்படங்கள் வந்துள்ளன.


சிறுவர்கள் கட்டாயம் பாரக்கவேண்டும்.. பெரியவர்களுக்கு சிலவேளை அலுப்படிக்கும்.. சும்மா விஞ்ஞானம்.. விவசாயம் ன்று பரபரப்பாகவே ுபோகிறது படம்.. நானும் ரசித்தேன்..


சிறுவருக்கான அனிமேட்டட படங்கள் வகுப்பில்
80/100

9 (2009)



உலக அழிவின் பின்னரான ஒரு காலப்பகுதியில் ஒரு சாக்கு போல உருவமுடைய ஜந்து விழி த்தெழுகிறது.. பின்னர் தன்னுடைய உருவத்தை ஒத்த சிலரை கண்டு பிடிக்கிறது.. அவை யார் ? ஏன் உலகம் அழிந்தது? அவர்களை அழிக்க வரும் அந்த இயந்திரங்க ள் என்ன? இப்படியான கேள்விகளுக்கு விடை மிக அழ காக ஆனால் அழுக்கான பின்னணியில் தரப்பட்டுள்ளது..


கிளைமாகஸ் சிலருக்கு புரியாமல் போகலாம்.. அது ஒரு குழப்பகரமானதாகுவே இருக்கிறது.. உயிர் (Soul) சேமிப்பு தொடர்பான சில கருத்துக்களும் அதனுள்தான் மானுடம் இருக்கிறது என்ற கருத்துகளும் உடன்பட முடியாதவை.. கடைசியா ‌ பெய்யும் மழைத்துளியில் வைரசுகள் மானுட soul உடன் வருவது போன்ற காட்சி சப்பென்று இருக்கிறது.. பேசாமல் முீண்டும் உலகம் உயிர் தோன்றிய காலத்துக்கு போவது பொல விட்டிருக்கலாம்..


குழந்தைகள் பார்த்தால் அவர்களுக்கு ஒரு இழவும் புரியாது.. அதுவும் 1 2 3 தெரியாத குழந்தைகள் கடுமை யாக குழம்பிவிடும் ..


அனிமேட்டட
் திரைப்படங்கள் வகையறாவில் 70/100

District 9 (2009)



பூமிக்கு வரும் ஏலியன்கள் .. அவர்கள் எமது ஐ டி பி காம்புகளை விட ஒழுங்கான காம்புகளில் குடியமர்த்த படுகிறார்கள்..




அப்போது ஒரு ஏலியன் சந்தேகத்துக்கிடமான வேலைகளை செய்கிறது.. அதை தற்செயலாக கண்டுபிடித்த இடத்தில் படத்தின் ஒரு முக்கிய கரெக்கடரக்கு விபரீதம் நிகழ்ச்து விடுகிறது..
அதன் பின் என்னவானது என்பதை திகட்டாத திருப்பங்களுடன் பார்க்க போடவேண்டிய ஒரே படம் District 9




வன்னியில் சண்டை நடக்கும் போது ரூபவாகினியில் காட்டியது போல தோள் கமெராவால் லைவ்வாக எடுத்தது போல படம் போட்ரெய்ட் செய்யப்பட்டது உகந்த
தெரிவு..


ஏலியன் பட வகுப்பில் 85/100

UP (2009)




Wall - E என்ற பிரமாண்ட வெற்றி பெற்ற அனிமேசன் திரைப்படத்தின் பின்னதாக பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்க பிக்சார் அனிமெசன்ஸ் தாபனம்
வெளியிட்ட அனிமெட்டட் திரைப்படம் UP...


UP வசூலில் வெற்றி பெற்றாலும் Wall - E போல குழந்தைகள் நெஞ்சை அள்ளவில்லை.. காரணம் படத்தில் இழையோடியிருக்கும் சோகம்.. இளவயதுக்கனவுகள் பலிக்காமல்
மரணிக்கும் ஒரு பெண் பாத்திரம் படத்தின் கலகலப்பை அழித்து விடுகிறது.. நகைச்சுவை பெரிதாக இல்லை.. ஆனாலும் கதையோட்டத்துக்காக பார்க்கலாம் அழகான
படம் கூட


அனிமேட்டட திரைப்படங்கள் வகுப்பில் 85/100

Monday, September 21, 2009

G.I. Joe: The Rise of Cobra (2009)





கான்சர் கலங்களை அழிக்க கண்டுபிடிக்கப்பட்ட நனோமைட்டுகள் எனப்படும் சிறிய சுயவிருத்தி செய்யக்கூடிய ரோபோட்களை உலகத்தை அழிக்க பயன்படுத்துவது
போன்ற ஒரு கதை.. சாம்பிள் அழிவுகளை காட்டி மக்களை பயப்படுத்த நினைக்கும் கும்பலை ஜோ குழுவினர் எப்படி அழிக்கிறார்கள் என்பதே படம்..
முடிவு இன்னொரு படமும் வரும் போல இருக்கிறது என்பதை உணர்த்துகிறது..

சும்மா பார்க்கலாம்.. கிராபிக்ஸ் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழமுடியாது.. வழமை போல சைனாக்காரன் சண்டை ஒண்டு இருக்கு.. இம்முறை ஒரு ப்ளாஸ்பேக்கையும்
கோட்டு வதைத்துள்ளார்கள்..

பொழுது போக்க வேறு ஏதும் இல்லாவிட்டால் பாருங்கள்..


எதிர்கால தொழிநுட்பம் , விஞ்ஞானம் , யுத்தம் , கிராபிக்ஸ் வகையின் கீழ் 40/100

உன்னைப் போல் ஒருவன்


தமிழ் படவுலகில் அருமையான வரவு.. மோகன்லாலும் கமலும் இரு போலி்ஸ் அதிகாரிகளும் ஒரு தக்காளிப் பழமும் என வேகமாக நகரும் கதை..

புதிய முயற்சி .. தொய்வுறாமல் போகிறது.. பெரிதாக காமெடி இல்லை.. ( வடிவேலு வந்து டிக்கியை ஆட்டவில்லை ) பாட்டு இல்லை.. ஆனால் சுவாரசியத்திற்கு குறைவில்லை..

பரபரவென நகரும் படைப்பு.. பாத்திரங்களின் தெரிவு பங்களிக்கிறது..
குண்டு வைத்து குறிக் கோளை சாதிப்பது தொடர்பான ஆங்கில பாணியிலான கதை..

கட்டாயம் பாரக்க வேண்டிய படம்..

சில லொஜிக் குத்தல்கள் உண்டு.. உதாரணமாக தக்காளிப்பழத்தை தடவிப்பொறுக்கும் ஒரவன் லாப்டொப்பை குப்பைக்குள் பொட்டு கொழுத்துதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. ஆனால் அதுவும் ஒரு பில்டப்பை கூட்டி படத்தை மெருகூட்டுகிறது..

திரில்லர் வகுப்பில் 76/100

Drag Me to Hell



The Ring என்ற படத்துக்கு பின் 3 வருடத்துக்கு பிறகு பயந்து நடுங்கி வேர்த்து விறுவிறுத்து அலறி குழறி 3 நாளா முக்கி முக்கி பார்த்த சிறந்த பேய்ப் படம்.. Drag Me to Hell

நான் பல பேய்ப்படங்களை காமெடிக்காக பாரப்பதுண்டு.. அவற்றில இப்படியான சில தற்செயலாக வந்து புளியைக்கரைத்து விடுவதுண்டு...

முடியல.. யாராவது இந்தப்படத்தை தனிய இரவில ஒரு லைட்டும் போடாமல் புல் சவுண்டில விட்டு பாத்தீங்களெண்டால் அடுத்தநாள் உங்களை கட்டாயம் ஆஸ்பத்திரியில வந்து பாப்பன்..



அந்த கிழவிதான் உந்த படத்தில நடுங்க வைக்கிறது... யம்மாடி.. ஆத்தாடி... என்னா ஒரு சூனியம்? என்னா ஒரு வன்மம்? என்னா ஒரு பொக்கை வாய்? அதில ஒரு ஓட்டை பலசெட்டு..

கடவுளே இபப்ப நெச்சாலும் வயித்தை கலக்குது..

கட்டாயம் பாருங்க..

நம்மட ஒபிசில ஒருத்தர் வீட்ட மனுசி கூட இருந்து இந்நத படத்தை பாத்திருக்கார்.. ஆளுக்கு இண்டைக்கு
பயங்கர காய்ச்சல்..
வேற ஒண்ணுமில்லீங்க ... படம் நடுவில தற்சயலா திரும்பினப்போ பக்கத்தில மனுசிய குளோசப்பில பாத்திட்டார்..

பய்ங்கர படங்கள் வகுப்பில இந்தப்படத்துக்கு 95/100