Monday, November 16, 2009

The Taking of Pelham 123 (2009)

சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவும் கதை சொலலும் கண் , வாய்க்காகவும் ஓடும் படங்கள்தான் நிறைய .. அதிலும் get shorty , Be cool போன்ற படங்கள் அருமை. படத்தை பார்த்து முடியும் போது மனதில் நிற்பது ”You are my god damn hero ” எனும் அவரது வசனங்களே.. வோல் ஸ்ட்ரீட் தொடர்பான கட்டாயம் பாரக்கவேண்டிய படம்.

கிறைம் திரில்லர் படங்களின் வகுப்பில் 90/100

Om Shanthi Om (2007)

ஏதோ புளுகு புளு கென்று புளுகுகிறார்குளே அப்படி என்னதான் படத்தில் இருக்கிறது என்று பாரத்துவிடலாம் என்று பார்க்க வெளிக்கிட்ட படம்.. எனக்கென்றால் பெரிதாக எதுவும் தெரியவில்லை.. சாரூக்கான் என்ற மாயையினால் படம் ஜெயித்திருக்கலாம். நடுவில் தமிழ் சினிமாவை காமெடி பண்ணினார்கள் குவிக்கன் முருகன் என்று ஒரு படமெடுப்பதாக கூறி..

பேய்க்கதை வகுப்பில் 25/100

Saturday, November 7, 2009

Tinker Bell (2009)

நட்பின் மேன்மை குறித்தான மிகச்சிறுவர்களுக்கான 3D அனிமேட்டட் படம்.. எனக்கு பார்த்ததில் மண்டைக்குள்ளால் போய்விட்டது.. மிகமிக சிறுவர்களுக்கான படம். நானும் ஏதோ தேவதை குட்டைப்பாவாடையுடன் வருவதால் கலகலப்பாக இரக்கும் எண்டு பாக்க வெளிக்கிட்டது.. கொடுமை பண்ணிட்டாங்கள்

சிறுவர்களுக்கான அனிமேட்டட் பட வகுப்பில் 45/100

Love Aaj Kal (2009)

இதை வீட்டில்தான் பார்த்தேன்..எனக்குப்பிடித்துப்போய்விட்டது..

இுளைஞன் : ” 2 வருசமா காதலிச்சு உங்களுக்குள்ள அப்பிடி மேட்டர் எதுவுமே நடக்கெல்லயா? ” எரிச்சலடைந்த முதியவர்: ”நாங்களெல்லாம் முதலில கனகாலம் கண்ணால காதலிச்சு பிறகு கஷ்டப்பட்டு கலியாணம் கட்டி அதுக்கெல்லாத்துக்கும் பிறகுதான் அதெல்லாம்...
உங்கள மாதிரி கண்டவுடன அதை முடிச்சிட்டு பிறகு .. ஓகே சிஸ்டர் உங்க பெயர் என்ன? என்று கே ட்ட ஆக்களில்ல”

காய்ஞ்ச மாடுகளாயிருக்கும் நம்ம இலங்கை இளைஞர்கள் இந்தப்படத்தை பார்த்தால் உடனே லண்டனுக்கோ ‌ அமெரிக்காவுக்கோ போக முயற்சிப்பது உறுதி ... சுப்பர் பிகரெல்லாம் சும்மா அலைவதாக காட்டி அப்பிடி கடுப்பேத்துவார்கள்.. நானே தலையை இரண்டு தரம் தலையை கொண்டுபொய் சுவற்றில் முட்டினேன். என்ன கொடுமையப்பா?

நல்ல கதை.. அழகான பாத்திர வடிவமைப்புகள்.. அழகான நடிகர்கள் , இனிமையான பின்னணி இசை என நன்றாகவே போகிறது படம்.

வெளிநாடுகளில் இந்தியர் வாழ்க்கை தொடர்பான படங்களில் 65/100

Aladin (2009)

அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையை வழமையான ஹிந்தி மசாலாப்பாணியில் சொல்லியிலுக்கிறார்கள்.. யாரோ இலங்கை அழகி நடிக்கிறார் என்று மஜெஸ்டிக் சினிமாவில் பாக்கப்போனால் நம்ம தேசபக்தியுள்ள சனம் என்னை முன்வரிசையில குந்த வைத்துவிட்டது.. என்ன கொடமைடா எண்டு உக்காந்தால் பூச்சாண்டி காட்டுறேன் பெர்வழி என்று மணித்தியாலக்கணக்காக படத்தை போட்டு நொய் நொய் என்று இழுத்து வெறுப்பேற்றி விட்டார்கள்..


எல்லாரும் படத்தை பார்ப்பதை விடுத்து தின்பதிலே யே குறழக்கோளாயிருந்தது மண் டபம் முழுக்க எதிரொலித்த நறுக்கு முறுக்கு சப்தங்களிலும் எரிச்சலூட்டும் பொலித்தீன் பைகளின் சரசரபபிலும் புலப்பட்டது .. திடீரென்று திரையின் அடிப்பாகத்தில் ,” நீங்கள் அதிஷ்டமுள்ளவாராயின் உங்கள் சீட்டுக்கடியில் பரிொசன்று இரக்கும் கண்டுபிடியுங்கள் ” என்று ஒரு அட் ஓடியது.. எல்லாரும் கையில் வைத்திருந்ததை கீழே பொட்டுவிட்டு எழும்பி நின்று சீட்டை தோண்டினார்கள்.. பின்னாலிருந்த பெண்ணொருத்தி என் சீட்டையும் தோண்ட எனக்கு கடுப்பாகி நானும் சீட்டு தோண்டும் விளையாட்டில் கலந்துகொண்டேன்.. அப்படியே ஒரு ‌ஜோக்கைப்போட்டு அந்த ஓ எல் படிக்கும் சிங்களப் பெண்களின் குழுவுடன் செட்டாகிக்கொண்டேன்.. இடைவேளை நேரம் ஓசியில் ஒரு ஐஸ்கிரீம் கிடைத்தது ..

படம் சொதப்பல்.. கிராபிக்ஸ் பரவால்ல.. மற்றும் படி வீண்காசு.. அந்த பெண்கள் என்னை பேஸ்புக்கில் அட் பண்ண ஈமெயில் ஐடி வாங்கிக்கொண்டு போனார்கள்.. இன்னும் ஒன்றையும் காணம்.. சே..

Mary and Max (2009)
மிக அருமையான , வயது வந்தவர்களுக்கான கிளேமேஷன் படம்.. இரு பேனா நண்பர்களுக்கிடையிலான 20 வருட வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு ‌ மனநோயளியும் ஒரு பெண்ணும் சந்திக்காமல் அனுபவிக்கும் உணர் வோட்டங்களை மிக தெளிவாகவும் அழகாகவும் வடிவமைப்பில் அசிங்கமான பாத்திரங்களளுடே விளக்குகிறார் இயக்குனர்.. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்..

படம் பார்த்து முடிந்ததும் என் மனம் ஏதோ இனம்புரியா உணர்வுகளால் நிரம்பியிருந்தது.. ஹட்ஸ் ஓப்ஃ டு டிரெக்டர்..கிளேமேசன் திரைப்பட வகுப்பில் 90/100


Mary & Max படத்தை மெகா அப்லோட்டில் ஒரே தடவையில் இறக்க இங்கே அழுத்துங்கள்

Wednesday, November 4, 2009

கண்டேன் காதலை ( 2009 )


யாழிலிருந்து விடுமுறையில் கொழும்பு வந்திருந்த தம்பிக்கு நான் ஈரோசில காட்டிய படம்.. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் போனதால் படம் பிரமிக்க வைத்து விட்டது..

அழகான காதல் கதையுடன் சந்தானத்தின் கொமெடியும் சேர்ந்து படத்தை பல்லக்கில் ஏற்றிவிட்டன.

ரொக்சியை விட பலமடங்கு வசதி மிக்க மலிவான தியேட்டர் ஈரோஸ். டிரிஎஸ் சவுண்ட் சிஸ்டம் எண்டால் என்னவெண்டு அங்கே போய்த்தெரிந்து கொள்ள வேண்டும். ஏசியும் பூட்டியுள்ளார்கள் பல்கனிக்கு.

கட்டாயம் போய்க் குடும்பத்துடன் பாருங்கள்.. ஏதோ ஹிந்திப்படத்தின் றிமேக்தானென்றாலும் அழகாக உள்ளது..

மென்மையான குடும்பப்படங்கள் வரிசையில் 80/100