நினைத்தாலே இனிக்கும் (2009)
நல்லகாலம்.. ஈரோசுக்கு போயிருப்பேன் இந்த இழவைப்பார்க்க.. கிடைத்த நல்ல கமெராக்கொப்பியால் ஒரு தலையிடி மிச்சம்..
ஏதோ சும்மா கல்லூரி காலம் , அது , இது , 8 வருசத்துக்கு பிறகு மர்ம முடிச்சு அவிழுது.. நழுவுது எண்டு எத்தனையோ படங்களில் பார்த்த அதே அலப்பறை..
பாட்டுக்களையும் சொதப்பல் சீன்களையும் ஓடவிட்டுப்பார்த்தே மனுசனுக்கு வெறுத்துவிட்டது.. அதிலும் அடிபட்ட ப்ரியாமணிக்கு மச்சான் மருந்து தயாரித்து ( அதுவும் ஸ்கூல் கெமிஸ்ரி லாப்பில்) கட்டி அழுகிற சீனைப்பார்த்தபோது காதால் வந்தது புகையாக இருக்கலாம்.
சிரிப்பே வராத கொமெடிகள்.. கவலையே வராத சென்டிமெண்ட் காட்சிகள் என்று அருமையான படம்.. உன்னைப்போல் ஒருவனில் வரும் சுருட்டு குடிக்கும் பெண் இங்கு
ஏதோ வந்து போகிறார்.. கடைசியாக கைகாட்டும்போது மக்கள் அழுவார்கள் என்று நினைத்து இயக்கிய டிரெக்டரை நினைக்க சிரிப்புதான் வருகிறது..
நினைத்தாலே இனிக்கும் : இனிப்பு போட மறந்துட்டாங்க..
கல்லூரி காலம் தமிழ்ப்பட வகுப்பில் 15/100
6 comments:
இதன் மலையாள வர்சன் அருமையாக இருந்ததாம். தமிழ்ப்படுத்தி கெடுத்து விட்டார்கள்
மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட் கிளாஸ்மேட் படத்தின் ரீமேக்.
கிளாஸ்மேட் ஒரு சிறந்த படமென்று பார்க்கும்படி நண்பரோருவர் கூறியிருந்தார், பார்க்க வேண்டும்.
ஆனா ரீமேக்கி சொதப்பிய இன்னுமொரு படம் இது.
பாடல்கள் பரவாயில்லை ப்ரியாமணிக்காக பார்க்கலாம்.
//பாடல்கள் பரவாயில்லை ப்ரியாமணிக்காக பார்க்கலாம்.//
ஆ... அது அப்படியா??
@புல்லட்டு
15 புள்ளியா.. தேறாது இந்தப் படம் ;)
ஆனா கந்த(ல்)சாமியை விட பரவாயில்லை என்று நண்பன் சொன்னான்...
உண்மையா?
கந்தசாமியைப்பாத்து கண்ணெல்லாம் நோகும்.. அந்த வரைக்கும் இது லாபம்.. ஆனால் கலலூருிகாலக்கதைகள் எத்தனையோ வந்திட்டு இனி எடுத்தா ஒருத்தரும் பாக்கமாட்டான்..
Post a Comment