Star Trek (2009)

பரவாயில்லாத  விண்வெளிப்படம்..  நல்லா அட்வான்சாகி  பல்வேறு உலகத்தில இரக்கிறவங்கள் எல்லாம் ஒரு  கூட்டமைப்பு மாதிரி உருவாக்கி வாழுற  நேரம் சில அழிவுகள்  ஆரம்பிக்குது..  என்னடா விசயம் எண்டு பாத்தா யாரோ ஒரு சொத்தி  மூக்கு    உலகத்தினர் ,  தங்கட உலகம் அழிஞ்சிட்டு  இருந்தபோது அதை காப்பாத்தேல்ல.. உங்களுக்கும் அதே வலி தெரியவேணும் .. இருங்கடா வாறம் எண்டுட்டு வழிதெருவில இருக்கிற  கிரகங்களை அழிக்கிறார்கள்..
எதிர்காலம் நிகழ்காலம்  அது இது எண்டு  குழப்பினாலும் அதை லொஜிக்  பிசகாமல் எடுத்து சென்றிருப்பது அருமை..  நடுவில ஹீரோவ ஒரு  பனிப்பிரதேசத்தில தள்ளி விட்டுடுவாங்கள்... அங்க கரடி   ,  நண்டு   போல பயங்கரமான பிராணி எல்லாம்  வந்த வயித்தை கலக்குது..  மற்றும்  படி நாம  நல் லூர்  திருவிழாவில வாங்கின மாதிரி   ரெண்டு மூண்டு துவக்கை வச்சு படத்தை  முடிச்சிட்டாங்கள்..
பொழுது போக்காட்ட பாக்கலாம்..
விண்வெளிச்சண்டை  படங்கள் வகுப்பில்  55/100 .
 
1 comments:
http://www.megaupload.com/?d=01S1RL98
Post a Comment